மாணவ, மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி

தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 443 மையங்களிலும்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 957 மையங்களிலும் மூன்று கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் புதூர் ஊராட்சி ஒன்றியம் முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சமூக தணிக்கையின் போது மாணவர்களுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

,நலமுடன் வாழ 10 கட்டளைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளும்,சுகாதார கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு டூத் பிரஷ், டூத்பேஸ்ட், சீப்பு, நகவெட்டியும்,அனைத்து மாணவர்களுக்கும் சோப்பும் வழங்கப்பட்டது.காலை உணவு திட்டத்திற்கு தட்டுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுனர் மோகன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியை தவமணி முன்னிலை வகித்தார்.மதிய உணவுத் திட்ட அமைப்பாளர் சகாயமேரி அனைவரையும் வரவேற்றார்.

சமூகத் தணிக்கை புதூர் வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் மாணவர்களுக்கு தன் சுத்தம் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்துசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சோப்பு உள்ளிட்ட சுகாதார பொருட்கள் மற்றும் நலமுடன் வாழ 10 கட்டளைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளையும்,காலை உணவுத் திட்ட 20 மாணவர்களுக்கு உணவு தட்டுகளையும், வழங்கி பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள் அனிதா ஏஞ்சலின்பிளாரன்ஸ்,செல்வி,ஜெயலட்சுமி,சமூகத் தணிக்கை வழி நடத்தும் குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி,அருணா,சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை உணவுத் திட்ட சமையலர் முனியத்தங்கம் நன்றி கூறினார்.







