தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம்
Oplus_16908288
காேவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்பியல் துறை மகளிர் கழகம் மற்றும் ஆஸ்கார் நிறுவனம் சார்பாக “ஸ்டார்ட் அப் மற்றும் புதியதொழில் மாதிரிகள்” என்ற தலைப்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்கழகப் பொறுப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். கோவில்பட்டி கேட்டலிஸ்ட் கான்ஸ்சப்ட் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.வினோத் “புத்தொழில் Spark 2026” என்ற தலைப்பில் ஸ்டார்ட் அப் பற்றியும், புதிய தொழில் தொடங்குவது மற்றும் மாற்றுச்சிந்தனையுடன் செயல்படுவது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
மேலும் அந்நிறுவனத்தின் இன்குபேட்டர் மேலாளர் வெ.சரண்யா இன்குபேட்டர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆலக்ஸ்சாண்டர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் ரா.கவிதா மஞ்சு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முனைவர் பெ.சித்ரலேகா தலைமையில் பேராசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மாணவியர்கள் பேராசியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.







