கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி செ. சீ.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில்( எஸ். எஸ். டி. எம்.), தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணிகளுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் செல்வம் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைத் தலைவர் ராஜவேல் மற்றும் துணை மேலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மெர்கண்டைல் வங்கி வேலையின் சிறப்பு அம்சங்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்கள்.
வங்கியின் துணை மேலாளர் ஸ்டெபி,வங்கி துறை தேர்வுக்கு பயன்படுத்த வேண்டிய புத்தகங்களைப் பற்றி மாணவர்களுடைய பகிர்ந்தார். மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விடையளித்தனர்.

தொடக்கத்தில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் விஜய கோபாலன் வரவேற்று பேசினார். மாணவி கோகுலஸ்ரீ நிதி நன்றி கூறினார்.







