கோவில்பட்டி கல்லூரியில் தொழில்முறை மனப்பான்மை கருத்தரங்கு
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), வணிக பகுப்பாய்வு துறை, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, நிறுவனத்தின் புதுமை மன்றம் ஆகியவை இணைந்து கல்லூரியில் கருத்தரங்கு நடத்தின.
“வளாகத்திலிருந்து வாழ்க்கை வரை… தொழில்முறை மனப்பான்மை” என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கிற்கு துறைத் தலைவர் பா. கிருபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையுரை ஆற்றினார்.

சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர். பா. மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரில் உள்ள விவேகானந்தா மேலாண்மை கல்வி நிறுவன அசோசியேட் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கே. துரை, உதவி பேராசிரியர்கள் எஸ்.கலைவாணி ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையிலிருந்து தொழில்முறை வாழ்க்கைக்கு மாறுவதில் தேவைப்படும் மனப்பாங்கு, திறன்கள், ஒழுக்கம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்துப் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இறுதியாக, நிறுவனத்தின் புதுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.







