போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லுரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கமானது வணிகவியல் தொழிற்சார் கணக்கு வைப்பு துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தோடு(அணி எண் 180) இணைந்து தேசிய இளையோர் தினத்தைக் கொண்டாடும் விதமாக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலமான வாழ்வு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார்பு நீதிபதி மாரிக்காளை கலந்து கொண்டு போதைப்பொருளினால் ஏற்படும் தீங்கு, சமுக ஊடகங்களில் மாணவர்களின் பயன்படுத்துவது மற்றும் மாணவர்கள் சமுகச்சீர்கேடு குறித்து விளக்கி பேசினார்.
கருத்தரங்கில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் கருப்பசாமி, மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் ஆனந்த்,மற்றும் மணிமேகலா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் அறிமுகம் செய்து வைத்தார். 500க்கு மேற்பட்ட இளையோர் மற்றும் நாட்டு நலப்பனித்திட்டதில் உறுப்பினர்களாக உள்ள மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்த கருத்துரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி, இயக்குனர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதல்படி, வழக்கறிஞர் ஜெயஸ்ரீ ,கல்லுரியின் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கு.மாரியப்பன் ,நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாரிசாமி மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.







