கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்து மாரியப்பன் (வயது 35). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு பொருட்களை ஏற்றுவதற்காக சென்று இருந்தார். துறைமுகத்தில் கண்டெய்னர் லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க என்ஜின் பகுதியின் கண்டெய்னர் இணைப்பு அறுந்து கடலுக்குள் 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் லாரி டிரைவர் […]
கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது. கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில், தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறைகள் மற்றும் ஆபத்துக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர். திடீர் தீ […]
சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ் கல்ட்சுரல் யோகா மற்றும் ஸ்டோர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடந்தது. கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை வரவேற்றார். தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். யோகா, சிலம்பம், செஸ், கேரம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய […]
தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி தொகுதி தேசிய முற்போக்கு திராவிடகழகம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடத்தது. மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர் வைரம் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி தொகுதி பாகமுகவர் பட்டியல் சமர்பிக்கப்பட்டது. மேலும் கோவில்பட்டி,விளாத்திகுளம் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு வரும் 12 தேதி வியாழக்கிழமை தலைமைகழகத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பொதுசெயலாளர் பிரேமலதா கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா […]
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகத்துறை சார்பில் மாநில அளவிலான வாசகர் விழா போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாநில அளவில் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு புத்தக குறிப்பான் தயாரித்தல், புத்தக மதிப்புரை, சொல் விளையாட்டு, நினைவாற்றல் பயிற்சி, கதை எழுதுதல், மவுனமொழி நடிப்பு, புத்தகத்தின் ஆசிரியரைக் கண்டுபிடித்தல் போன்ற நூலகம் தொடர்பான 7 தலைப்புகளில் போட்டிகள் நூலக வாசகர் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு . […]
கோவில்பட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் சிக்கி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.9.2018 அன்று 48 வயது பெண் கொலை செய்ய்யப்பட்டார், இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்படி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் […]
திருநெல்வேலி என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி கவிதா(55). இருவரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விபத்து ஒன்றில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர். காரை |முத்துக்குமார் என்பவர் ஓட்டினார். கோவில்பட்டிஅருகே தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் பகுதியில் நள்ளிரவில் சென்றபோது, திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியன் பகுதியை தாண்டி இவர்கள் கார் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை, சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர்.மூ.சுப்புலட்சுமி தலைமையுரை ஆற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர், தாவரவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் .பா.மகேஷ்குமார் பாராட்டுரை வழங்கினார். பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து 133 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளின் நிறைவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி,நகர தலைவர் அருண்பாண்டியன், கயத்தார் வட்டார தலைவர் செல்லதுரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கார்த்திக்காமராஜ்,ஐஎன்டியூசி ராஜாசேகரன்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ராஜாராம், ஆழ்வார்சாமி, கலைபிரிவு பெத்துராஜ், விவசாயபிரிவு பேரையா, எஸ்சிஎஸ்டி பிரிவு மாரிமுத்து, சிறுபான்மையினரின் பிரிவு அருள்தாஸ், சேவாதள பிரிவு […]
காேவில்பட்டி,கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வணிக நிர்வாகவியல் துறை சார்பில் இன்று 5/ 2/ 2026 வியாழக்கிழமை ‘ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கத்தை நடத்தியது. கல்லூரியின் இயக்குநர் ப. மகேஷ்குமார் தலைமை உரை ஆற்றினார். துறைத்தலைவர் சிவசங்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பயிலரங்கத்தில் சிவகாசி பி எஸ் ஆர் பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மையியல் துறை உதவிப் பேராசிரியர் எம் வெங்கடேஷ் கலந்து கொண்டு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







