தனியார் நிறுவன காவலாளி களுக்கு தீ தடுப்பு பயிற்சி முகாம்
கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்
காவலாளிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது.

கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில், தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறைகள் மற்றும் ஆபத்துக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர்.
திடீர் தீ விபத்து ஏற்படும்போது காவலாளிகள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து விளக்கிய பயிற்சியில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த காவலாளிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.







