கண்டெய்னர் லாரியின் முன்பகுதி கடலில் விழுந்து பலியான கோவில்பட்டி டிரைவர் குடும்பத்துக்கு நிதியுதவி
கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்து மாரியப்பன் (வயது 35). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.
சம்பவத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு பொருட்களை ஏற்றுவதற்காக சென்று இருந்தார்.
துறைமுகத்தில் கண்டெய்னர் லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க என்ஜின் பகுதியின் கண்டெய்னர் இணைப்பு அறுந்து கடலுக்குள் 100 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில் லாரி டிரைவர் முத்துமாரியப்பன் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் வெற்றி(8), வெள்ளத்துரை(6)ஆகிய மகன்கள் உள்ளனர்.

கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் புதிதாக கண்டெய்னர் லாரி தனியார் பைனான்ஸ் மூலமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது உயிரி ழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முத்து மாரியப்பன் உடலை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈ- வாகன் சேவை செய்திருந்தது, அதன் உறுப்பினர்கள் 1160 பேர் இதற்கான செலவை ஏற்றுக்கொண்டனர்.
ஈ- வாகன் சேவை அமைப்பினர் அதன் தலைவர் கணேசன், உயிரிழந்த முத்து மாரியப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிரிழந்த முத்து மாரியப்பன் குடும்பத்திற்கு உதவும் வகையில் லாரி உரிமையாளர்கள் சங்கமான ஈ- வாகன் சேவை மூலமாக ரூ. 2 லட்சம் நிதி வழங்கினர்கள். இதற்கான காசோலையை லட்சத்திற்கான காசோலையை இன்று (பிப்ரவரி 10) உயிரிழந்த முத்து மாரியப்பன் குடும்பத்தினரிடம் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் வழங்கினார்.
ஈவாகன் சேவை மாநில தலைவர் கணேஷ் குமார், செயலாளர் சாகுல் ஹமீது ஒருங்கிணைப்பாளர் வெள்ளங்கிரி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு செயலாளர் சாத்தையா, கோவில்பட்டி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன்,தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் முருகன் மற்றும் ஈவாகன் சேவையின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்







