கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி,நகர தலைவர் அருண்பாண்டியன், கயத்தார் வட்டார தலைவர் செல்லதுரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் கார்த்திக்காமராஜ்,ஐஎன்டியூசி ராஜாசேகரன்,பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர்,மாவட்ட செயலாளர்கள் துரைராஜ், ராஜாராம், ஆழ்வார்சாமி, கலைபிரிவு பெத்துராஜ், விவசாயபிரிவு பேரையா, எஸ்சிஎஸ்டி பிரிவு மாரிமுத்து, சிறுபான்மையினரின் பிரிவு அருள்தாஸ், சேவாதள பிரிவு சக்திவிநாயகம், சந்தனபாண்டியன், மரியசூசைராஜ்,கழுகுமலை நகர தலைவர் மரியதங்கராஜ், மகளிரணி நல்லமதி,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட, நகர,வட்டார நிர்வாகிகளுக்கு பதவிக்கான விருப்பமனு வழங்கப்பட்டது







