குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏக்கள், ஆட்சியர் பார்வையிட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 363-ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ.515.72-கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூல ம் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து வல்லநாடு – சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.







