‘ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வழிமுறைகள்’ பயிலரங்கம்
Oplus_16908288
காேவில்பட்டி,கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வணிக நிர்வாகவியல் துறை சார்பில் இன்று 5/ 2/ 2026 வியாழக்கிழமை ‘ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கத்தை நடத்தியது.
கல்லூரியின் இயக்குநர் ப. மகேஷ்குமார் தலைமை உரை ஆற்றினார். துறைத்தலைவர் சிவசங்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பயிலரங்கத்தில் சிவகாசி பி எஸ் ஆர் பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மையியல் துறை உதவிப் பேராசிரியர் எம் வெங்கடேஷ் கலந்து கொண்டு ஏற்றுமதி வணிக யுத்திகள் மற்றும் அதற்கான வழிமுறைகளைப் பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.
பயிலரங்கத்தின் தொடக்கத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றுப் பேசினார். முடிவில் மூன்றாம் ஆண்டு மாணவர் மாணவர் எம் ஆதிலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக முதலாமாண்டு மாணவி எம் கலைச்செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.







