• March 11, 2026

மாநில அளவிலான வாசகர் விழா  போட்டிகள்; அருப்புக்கோட்டை கல்லூரிக்கு  சுழற்கோப்பை

 மாநில அளவிலான வாசகர் விழா  போட்டிகள்; அருப்புக்கோட்டை கல்லூரிக்கு  சுழற்கோப்பை

கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகத்துறை சார்பில்  மாநில அளவிலான வாசகர் விழா  போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாநில அளவில் வெவ்வேறு  கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு புத்தக குறிப்பான் தயாரித்தல், புத்தக மதிப்புரை, சொல் விளையாட்டு, நினைவாற்றல் பயிற்சி, கதை எழுதுதல், மவுனமொழி நடிப்பு, புத்தகத்தின் ஆசிரியரைக் கண்டுபிடித்தல் போன்ற நூலகம் தொடர்பான 7 தலைப்புகளில் போட்டிகள் நூலக வாசகர் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.

மாலையில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு . கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமை தாங்கினார்,. அவர் நூலகத்தின் பயன்பாடுகள், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம், போட்டித் தேர்வுகள் குறித்து குறிப்பிட்டு  போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை, பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

. கல்லூரி பொறுப்பு முதல்வர் பா.உமாதேவி நூலகத்தின் செயல்பாடுகள் மற்றும் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்தி பேசினார். கணிதவியல்துறை, இணைப்பேராசிரியர் இரா.கிருஷ்ணவேணி. உதவிப்பேராசிரியர் பி.இசக்கியம்மாள், இயற்பியல்துறை உதவிப்பேராசிரியர் இரா.கவிதாமஞ்சு, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் எஸ்.வினயஸ்ரீ, தமிழ்த்துறை தலைவர்  எம்.சங்கரேஸ்வரி, ஆங்கிலத்துறைத் தலைவர் ஆர்.சரவணசெல்வகுமார், மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.எஸ்.ஜெயகுரும்பன், ஆகியோர் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்பட்டார்கள்.

மாநில அளவிலான போட்டியில் அதிகப் புள்ளிகள் பெற்று அருப்புக்கோட்டை, சைவ பானு ஷத்திரிய கல்லூரி, சுழற்கோப்பையை வென்றது.

தொடக்கத்தில் கல்லூரி நூலகர் சு.பாலா வரவேற்று பேசினார். முடிவில் மாணவ ஒருங்கிணைப்பாளர் செல்வன் கு.முருகன் நன்றி கூறினார்.

இந்த விழாவினை நூலக ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் எ.சுசிலா, நூலகர் சு.பாலா, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நூலக உறுப்பினர்களான மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *