• March 10, 2026

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

 வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (வயது 46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது நகை மோசடி நடந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த கீழக்கல்குறிச்சியைச் சேர்ந்த ரகுவரன்(36) என்பவர், மற்றவர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடி வரை மோசடி செய்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவரனைத் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *