• March 10, 2026

கோவில்பட்டியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 கோவில்பட்டியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் அமமுக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பூலோகப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. நகரச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

 கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். வீதி வீதியாக, வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்  நகர அவைத் தலைவர் வைகுண்டபாண்டியன், புறநகர் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் அமிர்தராஜ் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் விஜயபாஸ்கரன், மந்திரமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் முத்து, அருண், மதுசூதனன், குமார் பாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *