• March 10, 2026

உலக மகளிர் தின கருத்தரங்கம்

 உலக மகளிர் தின கருத்தரங்கம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் பெண்ணுரிமை காப்போம் – பாலின சமத்துவம் பெறுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் நடந்த கருத்தரங்கத்துக்கு மாதர் தேசிய சம்மேளனம் நகரச் செயலாளர் விஜயலட்சுமி, நகரத் தலைவர் கோமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநிலச் செயலாளர் கண்ணகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வழக்கறிஞர்கள் முனீஸ்வரி என்ற சாந்தி, முத்துப் பிருந்தா, சரவணலட்சுமி, மருத்துவர் ஆத்மிகா சஞ்சய், மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் திலகவதி, மாவட்ட தலைவர் தனலட்சுமி ஆகியோர் பேசினர்.

, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட உதவிச் செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், நகர நிர்வாகக்குழு உறுப்பினர் முனியசாமி, நகர பொருளாளர் சீனிவாசன் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *