• March 10, 2026

கோவில்பட்டி நகராட்சி சொத்து வரி பல மடங்கு உயர்வா?நோட்டீசை கண்டு  பொதுமக்கள் அதிர்ச்சி  

 கோவில்பட்டி நகராட்சி சொத்து வரி பல மடங்கு உயர்வா?நோட்டீசை கண்டு  பொதுமக்கள் அதிர்ச்சி  

கோவில்பட்டி நகராட்சிக்கு இந்த ஆண்டு பலமடங்கு சொத்து வரி உயர்த்தியது போல் தெரிகிறது. அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல் இது தொடர்பான வரி உயர்வு நோட்டீசை கண்டு , பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

கட்டிடம் மற்றும் குடியிருப்புகளின் கடந்த 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி 500 ரூபாய்க்கு குறைவாக  செலுத்திய நிலையில், இந்த வருடம் அதிரடியாக , சொத்து வரி 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விதிக்கப்பட்டிருப்பதால் கோவில்பட்டி நகராட்சி பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்,.

நகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள்  சரிவர செய்து தராத நிலையில் சொத்து வரி இத்தனை மடங்கு உயர்த்துவதா என்று அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்., கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் வசித்துவரும்  நேஷனல் சிறுதீப்பெட்டி  உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சேதுரத்தினம் இது பற்றி கூறியதாவது:-

சேதுரத்தினம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் சுமார் 450 சதுர அடி கொண்ட வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தோடு குடியிருந்து வருகிறேன். 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியாக 480 ரூபாயை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினேன். 40 ஆண்டுகளாக முறைப்படி தவறாமல் சொத்து வரியை செலுத்தி வருகிறேன்.

இந்த சூழ்நிலையில், 2025 – 26 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியாக 6,700 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தேன்; ஒருவேளை தவறுதலாக போட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தேன்.

அதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள் எனது வீட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்., அதன் பிறகும் எனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரி குறைக்கப்படவில்லை. இதேபோல் கடலையூர் ரோட்டில்
உள்ள குடியிருப்பு வீட்டிற்கு வரி ரூ 300 இருந்து 3600 ஆக உயர்ந்து உள்ளது

எனவே சொத்து வரி விதிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் இருக்கிறது. முன் அறிவிப்பு இல்லாமல் பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள்

இது போல் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் பெரும்பாலான  மக்களுக்கு இதுபோன்று அதிக அளவு சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு, கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க  வேண்டும், .

இவ்வாறு சேது ரத்தினம் கூறினார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *