மருமகனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் வைத்து தூத்துக்குடி கே.வி.கே சாமி நகரைச் சேர்ந்த ஹரிகுமார் 25/18 என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மாமனாரான தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 58/26 என்பவர் மற்றும் அவரது உறவினரான சத்தியநாராயணன் 34/26 ஆகியோர் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

இந்த சமபவம் கடந்த 2018ம் ஆண்டு நடந்டஹ்து,. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம்நேற்று (9.3.2026) மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்களில் சத்தியநாராயணன் என்பவரை விடுதலை செய்தார்., சுப்பிரமணியை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள்தண்டனை, மற்றும் ரூ 10,000/- அபராதம், விதித்தார். ம,எழும் கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். சுனில் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர். தங்ககிருஷ்ணன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர். ஆனந்த் கேப்ரியல் ராஜ், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் . சங்கரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







