கோவில்பட்டியில் பெண் கொலை: 8 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் சிக்கினர்
போலீஸ் வெளியிட்ட மாதிரி படம் .
கோவில்பட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேர் சிக்கி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.9.2018 அன்று 48 வயது பெண் கொலை செய்ய்யப்பட்டார், இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேற்படி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி எதிரிகளை கண்டுபித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . நை. சிலம்பரசன் சமீபத்தில் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து வழக்கு குறித்த சாட்சியங்களை சேகரித்தனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் பலனாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த டேவிட் ராஜ் (தற்போதைய வயது 28)), அப்போது இளஞ்சிறாராக இருந்த ஒருவர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேற்படி கொலை வழக்கு 8 வருடங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் ஒருவரை கைது செய்தும் ஒருவரை கையகபடுத்தியும் சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர். சண்முகம் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நை. சிலம்பரசன் பாராட்டினார்.







