கோவில்பட்டி தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிர்வாகிகள் கூட்டம்
Oplus_16908288
தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி தொகுதி தேசிய முற்போக்கு திராவிடகழகம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடத்தது.
மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர் வைரம் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி தொகுதி பாகமுகவர் பட்டியல் சமர்பிக்கப்பட்டது. மேலும் கோவில்பட்டி,விளாத்திகுளம் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு வரும் 12 தேதி வியாழக்கிழமை தலைமைகழகத்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

பொதுசெயலாளர் பிரேமலதா கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன்,கயத்தார் மேற்கு ஒன்றியசெயலாளர் நடராஜன் கலந்துகொண்டனர்







