தென்மாவட்ட கலை விழா போட்டிகள்: நாலாட்டின்புதூர், சாத்தூர் பள்ளிகள் முதலிடம்
Oplus_16908288

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ் கல்ட்சுரல் யோகா மற்றும் ஸ்டோர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடந்தது.
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை வரவேற்றார். தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார்.
யோகா, சிலம்பம், செஸ், கேரம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று நாலாட்டின்புதூர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளி, சாத்தூர் எப்சிஏடி மெட்ரிக் பள்ளி ஆகியவை முதலிடத்தை பிடித்தது. இந்த பள்ளிகளைச் சேர்ந்த அணிகளுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2-வது இடத்தை ஆலங்குளம் டான்ஸ் ஹார்டிட் நடனபள்ளியும், 3-வது இடத்தை புதியம்புத்தூர் ஹெச்.என்.யு.பி. மெட்ரிக் பள்ளி, கங்கை கொண்டான் நம்ம ஊரு குளோபல் பள்ளி ஆகியவை பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு வழக்கறிஞர் கணேஷ் சுப்பிரமணியம், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர், டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் சக்திவேல் முருகன், ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
டிரஸ்ட் செயலாளர் சூரியநாராயணன், பொருளாளர் சிவசக்தி வேல்முருகன், நிர்வாகிகள் சந்தனராஜ், நல்லதம்பி, சோலை நாராயணசாமி மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.







