கோவில்பட்டி தலைமை அஞ்சலக வர்த்தகப் பிரிவு சார்பாக கோவில்பட்டி நகர் வாழ் வியாபார பெருங்குடி மக்களுக்கான வெளிநாடு ஏற்று மதிக்கான பிரத்யேக ஏற்றுமதி வசதி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நாளை 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது இந்தியா போஸ்ட் சர்வதேச அளவில் 160 நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது இவர்களின் Parcel Packaging Unit மூலமாக சிறப்பான சேவையைத் தொடங்க […]
கோவில்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). இவர் முடுக்கு மீண்டான் பட்டியில் வசித்து வரும் இவர் இன்று பைக்கில் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சாலைப்புதூர் அருகேஅணுகு சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் பள்ளி வாகனம் மோதியது. விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் அவரது உடலை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசா ர் கைப்பற்றி […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் விருதுநகர் மாவட்டம் உப்பத்தூர் வழியாக நாருகாபுரத்திற்கு அரசு பஸ் செல்வது வழக்கம். நேற்று இரவு அண்ணா பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண் டிருந்த அரசு பஸ்ஸில் உப் பத்தூருக்கு செல்லும் பயணிகள் வழக்கம் போல ஏறி உட்கார்ந்திருந்தனர். அப்போது பஸ்சில் ஏறிய டிரைவர், பஸ்சில் உட் கார்ந்திருந்த பயணிகளி டம், இந்த பஸ் இன் றைக்கு உப்பத்தூருக்கு செல்லாது என கூறிய தோடு, அவர்களை பஸ் சில் இருந்து இறங்கும்படி […]
கோவில்பட்டி ஜோதி நகர் 1-வது தெருவை சேர்ந்த புதியவன் என்பவரின் மகன் காளிராஜ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் மகளிர் குழு கடன் தொகை வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இன்று மதிய நேரத்தில் இவர் மோட்டார் சைக்கிளில் புது ரோடு இறக்கத்திலிருந்து மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தார். வழக்கமாக இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சாலையை விதிகளை […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி, கடந்த கல்வியாண்டில் மாணவி ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அவர் 12-ஆம் வகுப்பு படிப்பைத் தொடர வேண்டிய சூழலில், மீண்டும் அதே விடுதியில் தங்கிப் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், விடுதி நிர்வாகம் தரப்பில் அந்த மாணவியைச் சேர்க்கக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. “மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று உரிய அனுமதி பெற்று, அவரிடம் கையெழுத்து வாங்கி […]
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ துறை சார்பில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். சமுகதணிக்கை வட்டார வள பயிற்று நர்கள் செல்வகுமார், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் […]
அதிமுகவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கடம்பூர் ராஜு, நான்காவது தடவை போட்டியிட்டபோது தோல்வி அடைந்தார். கோவில்பட்டி தொகுதியில் இதுவரை வெற்றி அடையாத திமுக வெற்றி பெற்று கோவில்பட்டி தொகுதியை கைப்பற்றியது. தேர்தல் தோல்விக்கு பிறகு கடம்பூர் ராஜு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் . அவரது முடிவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அடங்கிய கோவில்பட்டி […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி மகன் அருண்பாண்டியன் (23). இவர் நேற்று இரவு நேரத்தில் இளம்புவனத்திலிருந்து கோவில்பட்டி நோக்கித் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். அதே நேரத்தில், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருவரது மோட்டார் பைக்குகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு […]
கோவில்பட்டி ஶ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சி குழு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. திருநெல்வேலி ஸ்ரீ நாராயணகுரு கல்வி மற்றும் பொது சேவை அறக்கட்டளை சார்பில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடத்திற்கு ரூ 15,000க்கான காசோலையும்,2ம் இடத்திற்கு ரூ10,000 க்கான காசோலையும், 3ம் இடத்திற்கு ரூ 5,000 க்கான காசோலையும், 10ம் வகுப்பு […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் கடம்பூர் ராஜு. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் அமைச்சராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடை கடம்பூர் ராஜு அதிமுகவிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, தனது அதிரடி முடிவு குறித்து விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







