கோவில்பட்டியில் அஞ்சல் ஏற்றுமதி மையம்: நாளை தொடக்கம்
கோவில்பட்டி தலைமை அஞ்சலக வர்த்தகப் பிரிவு சார்பாக கோவில்பட்டி நகர் வாழ் வியாபார பெருங்குடி மக்களுக்கான
வெளிநாடு ஏற்று மதிக்கான பிரத்யேக ஏற்றுமதி வசதி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நாளை 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது
இந்தியா போஸ்ட் சர்வதேச அளவில் 160 நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது
இவர்களின் Parcel Packaging Unit மூலமாக சிறப்பான சேவையைத் தொடங்க உள்ளனர்
எனவே வீட்டிலிருந்தபடியே உங்கள் ஏற்றுமதி வணிகத்தை துவங்கலாம்.
இந்நிகழ்வில் அனைத்து ஏறறுமதியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கடல்கடந்து ஏற்றுமதி வணிகத்தை தொடங்குமாறு அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.








