கோவில்பட்டி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி யுடன் சந்திப்பு
அதிமுகவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கடம்பூர் ராஜு, நான்காவது தடவை போட்டியிட்டபோது தோல்வி அடைந்தார்.
கோவில்பட்டி தொகுதியில் இதுவரை வெற்றி அடையாத திமுக வெற்றி பெற்று கோவில்பட்டி தொகுதியை கைப்பற்றியது.
தேர்தல் தோல்விக்கு பிறகு கடம்பூர் ராஜு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் .

அவரது முடிவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அடங்கிய கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளரும், முன்னாள் கோவில்பட்டி ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான எஸ். பழனிச்சாமி தலைமையில், மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இச்சந்திப்பின்போது, கழகத்தின் வளர்ச்சி, வலிமை மற்றும் எதிர்கால அரசியல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், கழகத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, அடித்தட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளை ஊக்குவித்தார்.
கோவில்பட்டி மத்திய ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தங்களது அன்பையும் மரியாதையையும் தெரிவித்ததுடன், கழகத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட உறுதியளித்தனர்.
பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கிய வாழ்த்துகளும் அறிவுரைகளும் நிர்வாகிகளுக்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தன.

“கழகத்தின் வெற்றியே எங்கள் இலக்கு; பொதுச் செயலாளர் வழிகாட்டுதலே எங்கள் பயணத்தின் அடித்தளம்”என்ற உறுதியுடன் நிர்வாகிகள் தங்களது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்தனர்.







