5 குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை; அமைச்சர் ஆனந்த் வழங்கினார்
சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்தை கடந்த வாரம் சந்தித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணங்களை செலுத்த முடியவில்லை என்று தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 5 பெற்றோர்கள் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுக்களை உடனடியாக பரிசீலித்த அமைச்சர் , ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், பள்ளிக் கட்டணங்களை செலுத்த முடியாமல் தவித்து வந்த 5 குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவினார்கள்.
உதவித்தொகை பெற்றுக் கொண்டவர்களின் விவரங்கள்:
1. செ.ஹரிணி
2. வி செந்தில் வேல்முருகன்.
3. தி.திபேஷ்
4. எஸ்.ஶ்ரீவர்ஷினி
5. ஆர்.சோபனா
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டாக்டர் டி.கே .பிரபு, எஸ்.பி.கே. தென்னரசு, சி.விஜயலட்சுமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு , கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் , இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா உள்பட பலர் கலந்து கொண்டனர்








