அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கல்வி உதவித்தொகை
Oplus_16908288
கோவில்பட்டி ஶ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சி குழு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருநெல்வேலி ஸ்ரீ நாராயணகுரு கல்வி மற்றும் பொது சேவை அறக்கட்டளை சார்பில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடத்திற்கு ரூ 15,000க்கான காசோலையும்,2ம் இடத்திற்கு ரூ10,000 க்கான காசோலையும், 3ம் இடத்திற்கு ரூ 5,000 க்கான காசோலையும்,
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடத்திற்கு ரூ 10,000க்கான காசோலையும்,2ம் இடத்திற்கு ரூ5,000 க்கான காசோலையும், 3ம் இடத்திற்கு ரூ 3,000 க்கான காசோலையும், வழங்கப்பட்டது .

கோவில்பட்டி ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடத்திற்கு ரூ 5,000க்கான காசோலையும்,2ம் இடத்திற்கு ரூ 3,000 க்கான காசோலையும், 3ம் இடத்திற்கு ரூ 2,000 க்கான காசோலையும்,வழங்கப்பட்டது.
1330 திருக்குறளையும் ஒப்புவித்த என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாசினிக்கு ரூ3,000க்கான காசோலையும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசாக 35 மாணவர்களுக்கு தலா ரூ1000க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் மாரிக்கண்ணன், ஆலோசகர் திருப்பதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி வளர்ச்சி குழு, செயலாளர் வெங்கடேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.
திருநெல்வேலி ஸ்ரீ நாராயண குரு கல்வி மற்றும் பொது சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசங்கரலிங்கம், நடராஜன், செந்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பணி நிறைவு) பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் காசோலைகளை வழங்கி பேசினர்.

மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ்.தேசிய நல்லாசிரியை விநாயகசுந்தரி, இளையரசனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை முருக சரஸ்வதி,வழக்கறிஞர் முத்துராமலிங்கம்,ரோட்டரி சங்க துணைத் தலைவர் முத்து முருகன், பேராசிரியர்கள் ராஜா, செல்வம்,
ஸ்ரீ நாராயணகுரு கல்விவளர்ச்சி குழு நிர்வாகிகள் கோமதி சங்கர்,அருணாசலம்,கோபாலகிருஷ்ணன்,ஜெயக்குமார்,தினேஷ் பாலாஜி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க ஆலோசகர் கண்ணன் நன்றி கூறினார்.







