தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது ஏன்? கடம்பூர் ராஜூ விளக்கம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் கடம்பூர் ராஜு. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடை கடம்பூர் ராஜு
அதிமுகவிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, தனது அதிரடி முடிவு குறித்து விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடர் தோல்விகள் என்பது மிகவும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது , கட்சியில் பிளவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவுகளும் பிளவுகளும் இனிமேல் சரி செய்யப்படும் என்று நம்புவது ‘கானல் நீராகத்’ தான் முடியும் .
பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் வீழ்ச்சிக்கும் பிளவுக்கும் தான் எந்தவொரு சூழ்நிலையிலும் துணை போய்விடக் கூடாது என்ற கடுமையான மனக்குமுறலோடு தான் அதிமுகவிலிருந்து முழுமையாக விலகும் முடிவை எடுத்தேன்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உன்னதக் கனவுகளை நினைவாக்கும் வகையில், தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீய சக்தியான திமுகவை வீழ்த்தி, தூய சக்தியாக எம்ஜிஆரின் வழியில் மக்கள் பணியாற்ற போகிறேன்.

பணநாயகத்தை முற்றிலும் வீழ்த்தி, ஜனநாயக ரீதியாகப் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மறுஉருவமாக விளங்கும் புரட்சித் தளபதி விஜய் தலைமையில், தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியை அமைத்திடவும், மக்கள் பணியாற்றிடவும் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறேன்.
இவ்வாறு கடம்பூர் செ. ராஜூ தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.







