மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, தமிழகத்தின் மிக முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் விழும் இந்த அருவியில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் உற்சாகமாகக் குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அம்பாசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்து, அருவியில் ஆபத்தான முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.








