குழந்தையை மிரட்டுவதற்காக சாக்குப்பையால் மூடிய அங்கன்வாடி ஊழியர் கைது
Oplus_16908288
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அழுத குழந்தையை பயம் காட்டுவதற்குகாக சாக்கு பையில் கட்டுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் வீடியோவில் கண்ட அங்கன்வாடி ஊழியர் பெயர் கலைச்செல்வி என்று தெரிய வந்தது இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்ட ஆட் சியர் இச்சம்பவத்தை தொடர்ந்து அதிரடியாக அங்கன்வாடி ஊழியர் கலை செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.








