வாகன சோதனையில் கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்
Oplus_16908288
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே நேற்று (04.06.2026) போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ் . எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) ஆகிய 4 பேர் பிடி பட்டனர்- இதுகுறித்து காவல் ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து 1.100 கிராம் கஞ்சா, ரூ8000/- மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.








