உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கம், அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக, கோவில்பட்டியில் உலகச் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தினம், மாசுக் கட்டுப்பாட்டுத் தினம், உலக மிதிவண்டி தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரணிக்கு தலைமை தாங்கினார். கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கச் செயலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு, அகில இந்திய கட்டுநர் சங்கத் தலைவர் ராம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டிஎஸ்பி அலுவலகம் முன்பிருந்து பேரணி துவங்கி பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது.

பேரணியில் பசுமை தூய்மை இயக்கத்தின் தலைவர் ரவிமாணிக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கட்டமைப்பு தலைவர் தமிழரசன், துணை செயலாளர் வழக்கறிஞர் ரவிகுமார், நிர்வாகிகள் வினோபா, நல்லையா, முருக சரஸ்வதி, ராமலட்சுமி, சங்கர் மருத்துவர்கள் சிவசந்திரன், சேதுராமன் முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை செயலாளர் பிரபு, மை லைஃப் ஸ்டைல் முத்து பசுமை-தூய்மை இயக்க நிர்வாகிகள் பாபு, சுப்பிரமணியன், நேதாஜி-விவேகானந்தா சேவா சங்கம் நிறுவனர் நாகராஜன், கட்டுநர் சங்க நிர்வாகிகள் பார்வதிராஜா, அருள் ராஜா, தொழிலதிபர்கள் வெங்கடேஷ், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







