பெண்ணியிடம் 3½ பவுன் நகை பறிப்பு: வாலிபர் கைது
கோவில்பட்டியில் பெண்ணியிடம் 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

, கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (45). இவர் கடந்த 6-ம் தேதி ராஜீவ் நகர் அருகே நின்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச் சம்பவம் குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் அடிப்படையில், இக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாலாஜி நகரைச் சேர்ந்த காளிராஜ் (31) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.







