அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத் ,உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் இணைந்தனர்


சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.

இதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் எம்.சி.சம்பத், தருமபுரி பாப்பிரெட்டிபட்டி
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சேலம் சங்ககிரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், சேலம் வீரபாண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்ட பலர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசலும் அதிருப்தியும் நிலவி வரும் சூழலில், இந்த மூத்த நிர்வாகிகள் கட்சி மாறி இருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







