கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும் 4 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜா பெருமாளுக்கும் மாணிக்கவாசகர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு கோ பூஜை மகா தீபாராதனை தாண்டவ தீபாராதனை நடந்தது. இந்த பூஜைகளை காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். […]
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் கிராம விவசாயிகளுக்கு மானாவாரி பருத்தி; சாகுபடி தொழில்நுட்பங்கள் பற]றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது இந்திய வேளாண் வானிலை ஆராய்ச்சி திட்டத்திற்கு உட்பட்ட ஆதி திராவிடர் துணைத் திட்டம் மூலம் நடத்தப்பட்டது. முகாமுக்கு பேராசிரியர் முனைவர் கோ.பாஸ்கர் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மானாவாரி பருத்தி சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து குறிப்பிட்டார்.. பின்னர் மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. உதவி கலெக்டர் மகாலட்சுமி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். வாக்காளர் பட்டியலை கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, விளாத்திகுளம் தேர்தல் துணை தாசில்தார் வசந்த மல்லிகா, ஓட்டப்பிடாரம் தேர்தல் துணை தாசில்தார் ராதா மகேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கலந்துகொண்டவர்கள் நிகழ்ச்சியில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜ், தலைமை உதவியாளர் ராமகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார்கள் […]
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் ரோட்டில் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30) என்பவர் இருசக்கர வாகன காப்பக் நடத்தி வந்தார், நேற்று இரவு ஆனந்தராஜ் வாகன காப்பகத்தில் இருந்துள்ளார். நள்ளிரவுக்கு மேல் வாகன காப்பகத்துக்குள் பிளாஸ்டிக் கட்டிலை விரித்து போட்டு அதில் உறங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் தூங்கிகொண்டிருந்த ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சட்சபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். “2024 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் முழு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் அதற்கான பணிகளில் இப்போதில் இருந்தே ஈடுபடவேண்டும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்,
கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடை கடைகள் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் சார்பாக நடத்திய போராட்டத்தின் காரணமாக, மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு ஓடையை விரிவுபடுத்தி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி ஓடையின் கீழ்புறம் நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்டும் பணியை […]
கோவில்பட்டியில் உள்ள உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் உலக மாற்றுதிறனாளிகள் தினம் மற்றும் லூயி பிரைலி பிறந்ததினத்தையொட்டி பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:- லூயி பிரைலி கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான பிரைலி எழுத்து முறையினால் தான் பார்வையற்றவர்கள் வாழக்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். லூயி பிரைலி பார்வையற்றவர்கள் முன்னேற்றத்துக்கு உதவியது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பார்வையற்றவர்களுக்கு பல நலத்திட்ட […]
கோவில்பட்டி மெயின்ரோட்டில் சாந்தி மெடிக்கல் அருகே ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடையானது, 2 ஆண்டுக்கு முன்பு சாலை அகலப்படுத்தப்படும் போது அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் செலவில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர […]
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளாத்திகுளத்தில் நிருபர்களுக்கு அளித்த பெட்டியின் போது கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் பணி என்பது தலையாய மகத்துவமான பணி கொரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயரையும் கருதாமல் […]
கோவில்பட்டி களம் உடற்பயிற்சி மையம் சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான பகல், இரவு கைப்பந்து போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன, இளையரசனேந்தல் சாலையில் எல்.பி.எல்.கிட்ஸ் பார்க் எதிர்புறம் உள்ள களம் உடற்பயிற்சி மைய மைதானத்தில் இப்போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் மொத்தம் 25 அணிகள் பங்கேற்றன. பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க இருக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது. போட்டிகள் இரண்டு தடங்களில் நடந்தது. முதல் நாளன்று போட்டியை எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலட்சுமி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







