தி.மு.க. மாவட்ட பிரதிநிதி, பா.ஜனதாவில் சேர்ந்தார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமசாமி, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.. கோவில்பட்டியில் உள்ள பாஜக. மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் முன்னிலையில் இக்கட்சியில் சேர்ந்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆதிராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி எட்டையாபுரம் ஒன்றிய தலைவர் சரவணகுமார் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நாகராஜன் ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, அலுவலக மாவட்ட செயலாளர் ஜோதி ஒன்றிய பொதுச் செயலாளர் காளிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்