கோவில்பட்டி கடைகளில் பிளாஸ்டிக் `கேரி பேக்’ பயன்படுத்தப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திட தடை ஏற்கனவே அமலில் உள்ளதால் இன்று கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளி ராஜ், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சோதனை மேற்கொண்டனர்,
மெயின் ரோடு, பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொது சில கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தியது த கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்காரர்களுக்கு ரூபாய் 1700 அபராதம் விதித்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் திரு ராஜாராம் தெரிவிக்கும் போது வியாபாரிகள் தங்களது வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்
மேலும் இதுதொடர்பான ஆய்வு தினசரி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.