இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது ஆண்டு விழா கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் கொண்டாடப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தின் முன்பு உள்ள கட்சி கொடிக்கம்பத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன் கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நகர துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள் […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக 10-ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாகோவில்பட்டி முத்தையாமல் தெருவில் நடைபெற்றது. நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டார். இந்திய உலக அமைதிக்காக 1000 ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி,பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ்,நகர நிர்வாகிகள் தங்கப்பாண்டி,தவசி பாலு,மதிமுத்து முத்துக்குமார், முத்துப்பாண்டி, கணேசமூர்த்தி மற்றும் […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 99 -வது நிரந்தரம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பாஜக மாவட்ட அலுவலகத்தில் வாஜ்பாய் செயல்பாடுகளை நினைவூட்டும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகேசன், பொருளாளர் கே கே ஆர் கணேசன், தொழில்பிரிவுமாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் […]
கோவில்பட்டி லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 49-வது ஆண்டுமண்டல பூஜை மற்றும் மஹா அன்னதானம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு காயத்ரி வித்யாலய மண்டபத்தில் வைத்து சாஸ்தா ஹோமம் விஷேச அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12மணிக்கு மஹா அன்னதானம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கலந்து […]
கோவில்பட்டியில் உள்ள நீலா தேவி பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். காலை 6 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு தலைவர் […]
கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்க கோரி எட்டயபுரம் தாசில்தாரிடம் பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஆத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர் சேது ராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, […]
கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கம் சார்பில் தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன, சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சேலைகள், ;லுங்கிகள் மற்றும் பிஸ்கட், ரோட்டி, தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் அனைத்தும் சங்க தலைவர் சிவபிரகாசம், செயலாளர் சேனாபதி, பொருளாளர் கலியுகத்து அய்யனார் ஆகியோர் தலைமையில், நகராட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் அமைச்சர் கீதா ஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜே.சி.ஐ.) என்ற அமைப்பின் கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வந்தார்.அவரது ஒரு வருட பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 2024 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆர்.எஸ்.வெங்கடேஷ் நியமனம் செய்யபபட்டார. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி ) கோவில்பட்டி ஜே.சி.பவன் அரங்கத்தில் நடைபெற்றது.. விழா தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜே.சி.ஐ. உடனடி தேசிய தலைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி, கவுரவ […]
விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளத்தால் அழுகி போன மிளகாய் பயிருடன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார் . இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தூத்துக்குடி மாவட்ட தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் வெள்ளதுரை, ஒன்றிய செயலாளர் எல்லப்பராஜ் மற்றும் […]
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மழை நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரண தொகை அறிவிக்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேம்ண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சரவணா […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







