அன்னதான விழா : சாப்பிட்ட இலையில் ஐயப்ப பக்தர்கள் அங்கபிரதட்சணம்
கோவில்பட்டி லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 49-வது ஆண்டுமண்டல பூஜை மற்றும் மஹா அன்னதானம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 5 மணிக்கு காயத்ரி வித்யாலய மண்டபத்தில் வைத்து சாஸ்தா ஹோமம்
விஷேச அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து
காலை 9 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவிலில்
எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பகல் 12மணிக்கு மஹா அன்னதானம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் முடிந்த பிறகு குழந்தைகள், கன்னி சாமிகள், ஐயப்ப சுவாமிகள் மற்றும் பெண்கள், அனைவரும் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்க பிரதட்சணம் செய்தனர்.







