கோவில்பட்டி ஜே.சி.ஐ. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ், நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
ஜே.சி.ஐ.புதிய தலைவர் ஆர்,எஸ்,வெங்கடேஷ் பதவி ஏற்ற காட்சி,
115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜே.சி.ஐ.) என்ற அமைப்பின் கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வந்தார்.அவரது ஒரு வருட பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 2024 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆர்.எஸ்.வெங்கடேஷ் நியமனம் செய்யபபட்டார.
புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி ) கோவில்பட்டி ஜே.சி.பவன் அரங்கத்தில் நடைபெற்றது..
விழா தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜே.சி.ஐ. உடனடி தேசிய தலைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி, கவுரவ விருந்தினராக பங்கேற்ற 18-வது மண்டல புதிய தலைவர் கே.எஸ்.சிபி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உடனடி மண்டல தலைவர் எஸ்.பி.ராஜலிங்கம் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஜே.சி,ஐ. முன்னாள் தலைவர் பிரசன்னா வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், “இதுவரை தலைவராக இருந்த தீபன்ராஜ் பதவி காலத்தில் ஜே.சி.பவன் ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டு ஏ.சி.பவன் ஆகி இருக்கிறது. இது போல் புதிய தலைவர் வெங்கடேஷ் புதிய சாதனைகள் படைக்க வேண்டும் “ என்றார்.
கோவில்பட்டி ஜே.சி.ஐ.2023 தலைவர் டி,தீபன்ராஜ், ஆண்டு அறிக்கை வாசித்தார். அவர் தனது பதவி காலத்தில் செய்த பணிகள், சேவைகள் பட்டியலை விவரித்தார். மேலும் தனது பணிக்கு உதவியாக இருந்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இவரின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர். பின்னர் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஜே.சி.ஐ. செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த தற்போதைய செயலாளர் ஆர்,சூர்யா, திட்ட இயக்குனர் எல்.ரத்தினகுமார், முன்னாள் தலைவர்கள் பார்த்திபன், டென்சிங், ஏ.கண்ணப்பன், என்.ராஜவேல், செந்தில்குமார், ராஜ்குமார், லட்சுமி விக்னேஷ், என்.டி.சி.சுந்தர், அருண்குமார் உள்ளிட்ட பலருக்கு தீபன்ராஜ் நினவு பரிசு வழங்கினார்.
பின்னர் ஜே.சி.ஐ புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் பதவி ஏற்பு நடைபெற்றது. வெங்கடேஷ் அவரது மனைவி நிகிதா ஆகியோர் பலத்த கைதட்டலுக்கு இடையே அரங்கத்தில் இருந்து மேடையை நோக்கி வந்தனர். வெங்கடேசுக்கு ராஜா கோவிந்தசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஜே.சி.ஐ. உறுதிமொழியை சொல்ல அதனை வெங்கடேஷ் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றார்.
ராஜா கோவிந்தசாமி பேசுகையில் “20 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் தந்தைக்கு நான் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தேன். இப்போது மகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
தலைவர் கழுத்தில் அணியக்கூடிய பட்டயம் (தேசிய காலர்) கூட்டம் நடத்தும் போது பயன்படுத்தும் சுத்தியல் ஆகியவற்றை உடனடி தலைவர் தீபன்ராஜ் வழங்கி பொறுப்புகளை வெங்கடேசிடம் ஒப்படைத்தார்.





புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் பேசியதாவது:-
நான் எனது பதவிக்காலத்தில் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறேன். ஜே.சி.ஐ.உறுப்பினர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் வகையில் தனியாக ஒரு ஸ்டோர் தொடங்க ஏற்பாடு செய்வேன். அதில் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தையும் விற்கலாம்.
மேலும் உறுப்பினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பணியாட்களை வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யலாம். இதற்காக கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக சேவைகளின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு உதவி செய்யப்படும். மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஜே.சி.ஐ.சார்பில் பயிற்சி அளித்து அவர்கள் முன்னேற்றத்துக்கு துணை நிற்போம். மாதந்தோறும் ஜே.சி.ஐ.கூட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்ளும்படி செய்வேன். ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வோம்.
இவ்வாறு ஆர்.எஸ்.வெங்கடேஷ் பேசினார்.
ஆர்.எஸ்.வெங்கடேஷ் தலைவர் பதவி ஏற்றதும், செயலாளராக ஐ..அருண்பிரசாத், பொருளாளராக கே.எஸ்.சுரேந்தர், இணை செயலாளராக எஸ்.அகிலேஷ், இணை பொருளாளராக என்.ரகுபதி, துணை தலைவர்களாக ஆர்.சூர்யா, எஸ்.மனோஜ்கண்ணா, எஸ்.ஆனந்த், டி.ஸ்டீபன் நரேஷ், ராஜதுரை, பி.ஷியாம் சுந்தர் ஆகியோர் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர்.
இவர்களை தொடர்ந்து இயக்குனர்களாக எஸ்.விஜய் ஆனந்த், எஸ்.வர்ஷன், எஸ்.சிவ ஹர்ஷன், ஜே.தினேஷ் பாபு, வி.ஆர்.ராஜரத்தினம், கே,கருகுவேல் நிவாஸ், வி.உதயலட்சுமி,ஆர்.ஜென்சி ஆனந்தம், எம்.செல்வலட்சுமி, எஸ்.விகாஷ், எஸ்.லோகேஸ்வர் ஆகியோர் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்கள்.
ஜூனியர் ஜே.சி ஒருங்கிணைப்பாளர்களாக ஏ.கண்ணப்பன், ஜி.மணிகண்டமூர்த்தி, குழு ஆலோசகர்களாக பி.பி.பி.ராஜ்குமார், ஆர்.தயாள்சங்கர், ரத்ததானம் ஒருங்கிணைப்பாளராக பி.பிரவின்குமார் ஆகியோர் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற முன்னாள் தலைவர்களுடன் புதிய தலைவர் வெங்கடேஷ் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஜே.சி.ஐ. புதிய தலைமையின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள 2 பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி சேவைப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.
விழாவில் கோவில்பட்டி நகராட்சி துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், தொழில் அதிபர்கள் செந்தில் ஆண்டவர் பட்டு&ரெடிமேடு உரிமையாளர் ஜி.ஆறுமுகசாமி, விநாயகா ரமேஷ், ஏசியாபார்ம்ஸ் பாபு, கணேஷ் பேக்கரி ரவி மாணிக்கம்,நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மற்றும் மண்டல ஜே.சி.ஐ.நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவின் போது ஜே.சி.ஐ.புதிய உறுப்பினர்களாக 8 பேர் சேர்ந்தனர். மண்டல தலைவர் சிபி உறுதிமொழி வாசிக்க அதை திரும்ப சொல்லி புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்,
-SKTS.திருப்பதிராஜன்-







