கோவில்பட்டியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை , கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்படுகிறது. வருகிற 14ந்தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கபட இருப்பதாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர், மேலும் அன்றைய தினம் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் […]
ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறை, ஜமாபந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியை நடத்தி வருகிறார், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (11.6.2024) படர்ந்தபுளி உள்வட்டத்திற்குட்பட்ட படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், […]
கோவில்பட்டியில் வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 13 வயதுக்குட்பட்ட பெண்கள் இளம் ஆக்கி வீராங்கனைகள் தேர்வு வருகிற 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவில்பட்டி SDAT செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் மேலும் 1.1.2012 க்கு பின் பிறந்திருப்பவராகவும் தேர்வில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் வேல்ஸ் அகாடமியின் விடுதியில் தங்கி பயிற்சி பெற தயாராகவும் […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகம் இருக்கும். பயணிகள் நிற்ககூட இடம் இருக்காத அளவுக்கு சிறுவியாபாரிகள் இடங்களை ஆக்கிரமித்து கொள்வார்கள். இந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் பஸ்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெப்போவில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.. அப்படி அந்த பஸ்கள் வரும்போது இடம் எப்போதுமே காலியாக இருப்பதில்லை. அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை […]
மதுரையில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் கோவில்பட்டி கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய “முகமறியா சிற்பி ” நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய கவிஞர் அமுதபாரதி நூலை வெளியிட பாரதியாரின் கொள்ளுப் பேத்தி முனைவர் உமா பாரதி , சாகித்ய அகாதமியுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேசு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் 7ந் தேதி தொடங்கியது. போட்டியின் நிறைவு நாளான இன்று(9-ந்தேதி)காலை நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் புதுச்சேரி வாரியர்ஸ் ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி […]
கோவில்பட்டி முத்தையா மால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார்.நற்பணி இயக்கத்தை சேர்ந்த கண்ணன்,பள்ளி சீருடைகளை வழங்கினார்.நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், மதிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் கோவில்பட்டியில் 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி கே.அய்யப்பன் தலைமையில் நடந்தது. சார்பு நீதிபதி டி.மாரிக்காளை முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.கருப்பசாமி, குற்றவியல் நீதிபதி பி.பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி கே.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு […]
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் 5 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. காலையில் முதல் போட்டியாக மூப்பன்பட்டி வீரன் சுந்தரலிங்கம் ஆக்கி அணி இலுப்பையூரணி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கூசாலிபட்டி ஏ எம் சி அணியினர் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியாக சேலம் ஹாக்கி அணி பாண்டவர்மங்கலம் […]
கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 50). இவர் ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே மீன் மற்றும் கோழி கடை நடத்தி வந்தார். அதே கடையில் மேலப்பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த மகாராஜா என்ற சாமி (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இருவரும் மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு பிறகு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த வந்த 3 பேர், கடைக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







