கோவில்பட்டி வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 16 ம் தேதி வீராங்கனைகள் தேர்வு

 கோவில்பட்டி வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 16 ம் தேதி வீராங்கனைகள் தேர்வு

கோவில்பட்டியில் வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 13 வயதுக்குட்பட்ட பெண்கள் இளம் ஆக்கி வீராங்கனைகள்  தேர்வு வருகிற 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவில்பட்டி SDAT செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் மேலும் 1.1.2012 க்கு பின் பிறந்திருப்பவராகவும் தேர்வில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் வேல்ஸ் அகாடமியின் விடுதியில் தங்கி பயிற்சி பெற தயாராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் வீராங்கனைகளுக்கு ஆக்கி பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக

வழங்குவதுடன் சிறப்பு ஆக்கி பயிற்சியாளர்கள் மற்றும் சர்வதேச ஆக்கி வீரர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 79045 58324, 94431 90781 ஆகிய அலைபேசி எண்களில் அழைக்கலாம் என்று வேல்ஸ் ஆக்கி அடாடமி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *