ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வு; கோவை மாணவர்கள் 4 பேர் சாதனை
.சென்னை ஐஐடி – என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 என்ற நுழைவு தேர்வை சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் 26″ம் தேதி நடத்தியது.
உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்படுகின்ற இந்த தேர்வை எழுத இந்தியா முழுவதிலும் இருந்து 1,80,200 பேர் விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர்.
இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வில் இந்தியா முழுவதிலும் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட 4 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
மேலும் இம்மையத்தில் பயிற்சி பெற்ற ஸ்ரீ ராம் என்ற மாணவர் இந்திய அளவில் 390 வது இடம் பிடித்துத்துள்ளார்.
சாதனை படைத்த 4″மாணவர்களையும் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் மையத்தில் பயிற்சி ஆசிரியர்கள் பாராட்டு விழா நடத்தினர்.
மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் கேக் வெட்டியும் இந்த வெற்றியை கொண்டாடினர்.