தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்

 தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வா? தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1 ம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

அதாவது, ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம்  இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது

இதன் அடிப்படையில், நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 சதவீத்  அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது.

இதன்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சார கட்டணம் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. 2022-ல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2023 ம் ஆண்டு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

எனவே, நடப்பு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது,

“ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் மீண்டும் உயரப்போகிறது என்று வெளியாகும் தகவலில் உண்மையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் “ என்று தமிழ்நாடு  அரசு தரப்பில் தெரிவிக்கபப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *