கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி : புதுச்சேரி அணிக்கு வெற்றி கோப்பை
![கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி : புதுச்சேரி அணிக்கு வெற்றி கோப்பை](https://tn96news.com/wp-content/uploads/2024/06/IMG-20240609-WA0555-850x560.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/06/IMG-20240609-WA0558-1024x576.jpg)
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் 7ந் தேதி தொடங்கியது.
போட்டியின் நிறைவு நாளான இன்று(9-ந்தேதி)காலை நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் புதுச்சேரி வாரியர்ஸ் ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியை தோற்கடித்தது.
மாலையில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியை வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதி போட்டியில் புதுச்சேரி வாரியர் ஆக்கி அணி 3-2 என்று கோல் கணக்கில் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியை வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தொழில் அதிபர் சதீஷ் தலைமை தாங்கினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/06/IMG-20240609-WA0559-1024x576.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/06/IMG-20240609-WA0576-1024x576.jpg)
கோவில்பட்டி 32 வது நகர் மன்ற உறுப்பினர் சண்முகராஜா, 33 வது நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் பரிசாக புதுச்சேரி வாரியர்ஸ் அணிக்கு கோப்பையும் ரூ. 20000 ரொக்க பரிசும் தொழிலதிபர் எஸ் சதீஷ் வழங்கினார். இரண்டாவது இடம் பெற்ற பாண்டவர்மங்கலம் அணிக்கு ரூ. 15,000 மற்றும் கோப்பையை கமலேஷ் வழங்கினார்.
மூன்றாவது இடம் பெற்ற கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணிக்கு தொழிலதிபர் நாகராஜ் ரூ 10 ஆயிரம் வழங்கி சிறப்பித்தார்.நான்காவது இடம் பெற்ற கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணிக்கு ரூ 7000 மற்றும் கோப்பையை தொழிலதிபர் வி ரமேஷ் வழங்கினார்.
இந்த போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை யங் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து பெரியசாமி புதுச்சேரி ஆக்கி அணியில் இருந்து சூர்யா, பாண்டவர்மங்கலம் அணியில் இருந்து மாதேஷ் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியில் இருந்து மனோஜ் குமார் ஆகியோர் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி மற்றும் தொழிலதிபர்கள் கமலேஷ், நாகராஜ், ரமேஷ் ,மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டியின் இயக்குனராக திருச்செல்வம் மற்றும் நடுவர்களாக அஸ்வின் , மூர்த்தி, மதன்குமார், கார்த்திக் ராஜா, சண்முகப்பிரியா, மதனா, பாலமுருகன், அஜித் ,மந்திரம், ஆகியோர் செயல்பட்டனர்.
இறுதியில் யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கருப்பசாமி,முனிராஜ், விஜய், சுதாகர், பெரியசாமி,கலைச்செல்வம், மணிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)