கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிற்குமிடத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு
![கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ்கள் நிற்குமிடத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/06/b5ac8086-a058-4075-b053-356e3d8cfbf4-850x560.jpeg)
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகம் இருக்கும். பயணிகள் நிற்ககூட இடம் இருக்காத அளவுக்கு சிறுவியாபாரிகள் இடங்களை ஆக்கிரமித்து கொள்வார்கள்.
இந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் பஸ்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெப்போவில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்..
அப்படி அந்த பஸ்கள் வரும்போது இடம் எப்போதுமே காலியாக இருப்பதில்லை. அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் சென்று விடுகிறார்கள்.மறுபடியும் மாலை நேரத்தில் திரும்பி வரும் வரை அந்த இடத்தில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகிறார்கள்.
குறிப்பாக கழுகுமலை, சங்கரன்கோவில், ராஜபாளையம் செல்லக்கூடிய பஸ்கள் நிற்குமிடத்தில் தான் இந்த ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
இதனால் வெளியூர்களில் இருந்து வந்து பயணிகளை ஏற்றி செல்லும் இடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்,
மேலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்துவதற்கும், பஸ்களை நிறுத்த இடையூறு ஏற்படாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)