மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மீண்டும் தொடக்கம்
![மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மீண்டும் தொடக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2024/06/makkalmeeti.jpg)
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)