தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து உயரத் தொடங்கி 28-ந் தேதியில் முதல் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்து, இதுவரையில் இல்லாத வரலாறு […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா நாட்கால் விழா நடந்திருக்கும் நிலையில் 4 -ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதை தொடர்ந்து 5.4.2025 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது,மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடைபெறும். அன்றைய மண்டகப்படிதாரர் : திருக்கோயில். […]
கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி பர விந்தியா மார்ச் 27 முதல் 30 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றார். -2024 2025 ஆம் கல்வியாண்டில் SGFI தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்க பதக்கம் வேன்றுள்ளார். முதலமைச்சர் கோப்பைக்கான […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில், கோவில்பட்டியில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் […]
தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சுகாதார காவலரிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என முறையாக தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்கிய மகேஸ்வரி, அனிதா,சங்கரலட்சுமி, ராதாருக்மணி, சமுத்திர வள்ளி, செல்வ ஈஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி […]
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி செயலர் மகேந்திரன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண் மருத்துவர்கள் கீர்த்தனா மற்றும் ரிங்சன் […]
கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி(வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சங்கிலி பாண்டி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு கயத்தாரில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கயத்தாறு – கடம்பூர் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி விலக்கு அருகே சென்றபோது அவர் சென்ற […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாட்கால் நடும் வைபவம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு நாட்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, […]
கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா ஆர்த்தி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் தலைமை தாங்கினார்.. செயலாளர் வக்கீல் அழகர்சாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் பட்டுராஜன், ஜெனரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, பொன்னூஸ் நேச்சுரல் புராடக்ட்ஸ் சேர்மன் பொன்னுச்சாமி,தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் மாநில தலைவர் வேங்கடவிஜயன்,மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் […]
தமிழ்நாடு விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையின்போது துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டிகளை சென்னை மற்றும் மதுரையிலும் நடத்தப்படும் என்று வெளியிட்டு அறிவிப்பு மூலம் தென் தமிழக ஆக்கி விளையாட்டு வீரர்களின் நெடுநாள் கனவு நனவாகிறது. வருங்காலத்தில் தென் தமிழக ஆக்கி வீரர்களுக்கு நிரந்தரமான பயன்பாட்டை தரும்.. மேலும் 24 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் கடுமையான போட்டிகள் காண்பதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கும். இதுவரை உலகக் கோப்பை போட்டிகள் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







