தேசிய கபடி போட்டியில் பங்கேற்று கோவில்பட்டி மாணவி சாதனை

கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி பர விந்தியா மார்ச் 27 முதல் 30 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றார்.
-2024 2025 ஆம் கல்வியாண்டில் SGFI தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்க பதக்கம் வேன்றுள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்க பதக்கம் வென்றார். மேலும் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டி மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியிலும் கலந்துகொண்டார்
2024 2025 ஆம் கல்வியாண்டில் பல்வேறு கபடி போட்டிகளில் பல சாதனைகள் புரிந்து. பள்ளிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவி பர விந்தியாவை பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜ், பள்ளி முதல்வர் வசந்தா , உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
