தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசு வக்கீல்கள் 2 பேர் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வக்கீல்கள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வக்கீல் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வக்கீலையும் மாவட்ட மத்திய அரசு கூடுதல் வக்கீலையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வக்கீலாக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வக்கீல் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வக்கீல் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இவரது கணவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கான மத்திய அரசின் கூடுதல் வக்கீலாக நியமிக்கபப்ட்டு இருக்கும் என்.சுரேஷ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பதவி வகிக்கிறார்.
