கோவில்பட்டிக்கு சர்வதேச தரத்தில் இன்னொரு ஆக்கி மைதானம் தேவை

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையின்போது துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டிகளை சென்னை மற்றும் மதுரையிலும் நடத்தப்படும் என்று வெளியிட்டு அறிவிப்பு மூலம் தென் தமிழக ஆக்கி விளையாட்டு வீரர்களின் நெடுநாள் கனவு நனவாகிறது.
வருங்காலத்தில் தென் தமிழக ஆக்கி வீரர்களுக்கு நிரந்தரமான பயன்பாட்டை தரும்.. மேலும் 24 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் கடுமையான போட்டிகள் காண்பதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை உலகக் கோப்பை போட்டிகள் 13 முறை நடந்துள்ளன 14வது முறையாக நம் தமிழகத்தில் சென்னையில் முக்கியமாக மதுரையில் நடப்பது தமிழக விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல்.
ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பாக சர்வதேச ஆக்கி போட்டி மற்றும் தேசிய அளவிலான ஆக்கி போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தி தமிழக ஆக்கியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய ஆக்கி இந்தியாவின் பொருளாளரும் ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவருமான சேகர் ஜே மனோகரன், ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் செந்தில் ராஜ்குமார் , மதுரை மாவட்ட ஆக்கி சங்கர் தலைவர் ஏ. ஜி.கண்ணன் ஆகியோர் பங்கு மிகச் சிறந்தது..

தமிழகத்துக்கு முக்கியமாக தென்தமிழகத்திற்கு ஜாதி மத பேதம் இறுக்கம் குறைவதற்காகவும் சகோதரத்துவம் வளர்வதற்காகவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆக்கி விளையாட்டு முதலில் கல்லூரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து இந்த ஆக்கி விளையாட்டு முக்கியமாக மதுரை, திருநெல்வேலி பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து ஆக்கி விளையாட்டு பிரபலம் அடைந்து சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி பின்னர் மாநில அளவிலும், இந்திய அளவிலும் புகழ்பெற்ற போட்டிகள் இங்கு நடக்கலாயின.
முக்கியமாக கோவில்பட்டியில் உள்ள லட்சுமி மில் நிறுவனம் அகில இந்திய ஆக்கிப்போட்டியை தொடர்ந்து 55 ஆண்டுகள் நடத்தி வந்து கொண்டிருந்தது. மதுரா கோட்ஸ் சார்பாக மதுரையில் ஐசக் கோப்பை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வி .கே. புரத்தில் அகில இந்திய ஆக்கி போட்டிகள் நடந்தன மற்றும் . சிவகாசியிலும் அகில இந்தியபோட்டிகள் தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக தென் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தமிழக அணியில் தற்பொழுது வரை முக்கியத்துவம் பெற்றனர்..1980 க்கு பின் வந்த செயற்கை புல் தரை மைதானம் மொத்த விளையாட்டு தன்மையை மாற்றியது. செயற்கை புல் மைதானம் அமைப்பதற்கு பல கோடிகள் செலவாகும் சூழ்நிலையில் தென் தமிழகத்தில் இப் பெரும் போட்டிகள் நடப்பது குறையலாயின.

கோவில்பட்டியில் மட்டும் தற்போது லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக தொடர்ந்து அகில இந்திய ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டியைத் தவிர மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட அகில இந்திய ஆக்கி போட்டிகள் நிறுத்தப்பட்டன.
கோவில்பட்டியில் செயற்கைப்புல் ஆக்கி மைதானம் வந்த பின்பு தமிழக ஆக்கி சங்கம்(HUT) மற்றும் தூத்துக்குடி ஆக்கி சங்கத்தின் சார்பாகவும் இரண்டு தேசிய ஆக்கி போட்டி, மேலும் சப் ஜூனியர் , ஜூனியர், சீனியர் , ஆண்கள் மற்றும் பெண்கள் மாநில சாம்பியன் போட்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு ஆக்கி விளையாட்டு விடுதி கோவில்பட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு விடுதியில் பயிற்சி பெற்ற மாரீஸ்வரன், கார்த்தி, சதீஷ் ஆகிய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர் மேலும் ஆக்கி விளையாட்டின் மூலம் 15 க்கும் மேற்பட்ட வீரர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
கடந்த 4 ஆண்டுகளாக அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் நமது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி வெற்றி பெற்று அகில இந்திய அளவில் முத்திரை பதித்து வருகிறார்கள்.
தென் தமிழகத்தில் மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய நகரங்களில் செயற்கை புல் ஆக்கி
மைதானம் தற்பொழுது உள்ளது. ராமநாதபுரத்தில் மட்டும் கேலரி வசதியுடன் கூடிய ஆக்கி மைதானம் உள்ளது கோவில்பட்டியில் உள்ள ஆக்கி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் போது மட்டும் தற்காலிக கேலரி, மேடை, சிறுநீர் கழிப்பிடம் , உடைமாற்றும் அறை, அமைக்கப்படுவதால் செலவு இரு மடங்காக உயர்கின்றன.
ஆக்கி பட்டியாக திகழும் கோவில்பட்டியில் ஆக்கி போட்டியை திருவிழா போல் காண அலை அலையாக வந்து வீரர்களை உற்சாகப்படுத்தி ஆக்கி போட்டியை கொண்டாடுவார்கள். ஆக்கி விளையாட்டு என்பது கோவில்பட்டி மக்கள் ரத்தத்தோடு கலந்த ஒன்றாகும்.கோவிந்தா, ராதாகிருஷ்ணன், ஜெகன், ராமசாமி, அஸ்வின், போன்றோர் இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்த்துள்ளனர்.
கோவில்பட்டிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கடந்த ஆண்டு தமிழக அரசு கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி தொடங்கப்படும் என அறிவித்து ரூபாய் ஏழரை கோடி ஒதுக்கி தற்போது கோவில்பட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு முதல் சிறப்பு விளையாட்டு விடுதி தொடங்க உள்ளதால் கோவில்பட்டி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயன் அடைவார்கள். ஆனால் கோவில்பட்டியில் உள்ள வீரர்களுக்கு விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
கோவில்பட்டியில் உள்ள மூத்த மற்றும் இளம் வீரர்கள் தினமும் பயிற்சி பெறுவதற்கு ஆக்கி மைதானம் இல்லாமல் பொது இடங்களில் மற்றும் தனியார் இடங்களிலும் விளையாடி வருகிறார்கள் ஆகையால் அதிக ஆக்கி வீரர்களைக் கொண்ட கோவில்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி \மத்திய அரசின் திட்டமான கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக்கி மைதானம் வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தார்.ஆனால் இது பற்றி தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது.
ஆகையால் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஆக்கி மைதானத்தின் அருகில் மற்றொரு ஆக்கி மைதானம் தமிழக அரசு அமைத்தால் அடுத்த ஆண்டு வர இருக்கின்ற பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி வீரர்களும் கோவில்பட்டியில் உள்ள ஆக்கி வீரர்களும் பயன் அடைவார்கள். இரண்டு மைதானங்கள் இருந்தால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக இருக்கும். போட்டி நடத்துவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான செயற்கைப்புல் ஆக்கி ஸ்டேடியம் அமைத்துத் தர வேண்டும்
இந்த் கோரிக்கையை ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளி முத்து பாண்டி ராஜா உடற்கல்வி ஆசிரியர்கள்

பாரதி ராஜன், கிருஷ்ணமூர்த்தி, முருகன், சுரேஷ்குமார், பிரகாஷ் ,சிவானந்தம் சுரேந்தர், ஜெய் கணேஷ், வேல்முருகன் ,சதீஷ், மாரியப்பன், தங்கராஜ் , முன்னாள் தேசிய ஆக்கி வீரர்கள் காளிதாஸ், மணிவண்ணன், மனோஜ் குமார், உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
தொகுப்பு:செ.குருசித்திர சண்முகபாரதி, செயலாளர்,ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி.
