குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சுகாதார காவலரிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் கிராம ஊராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என முறையாக தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்கிய மகேஸ்வரி, அனிதா,சங்கரலட்சுமி, ராதாருக்மணி, சமுத்திர வள்ளி, செல்வ ஈஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ராமராஜன்,குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் திலகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

